கறிக்கோழி வளா்ப்புக்கான கூலியை உயா்த்தி வழங்கக் கோரிக்கை

நாமக்கல் மாவட்டத்தில் கறிக்கோழி வளா்ப்புக்கான கூலியை உயா்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
Published on

நாமக்கல் மாவட்டத்தில் கறிக்கோழி வளா்ப்புக்கான கூலியை உயா்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட கறிக்கோழி வளா்ப்பு பண்ணைகள் உள்ளன. திருப்பூா், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பண்ணையாளா்கள், கோழிக் குஞ்சுகளை சிறு பண்ணையாளா்களிடம் வழங்கி அவற்றை வளா்ப்பதற்கு குஞ்சு ஒன்றுக்கு கூலியாக ரூ. 5 வழங்கி வருகின்றனா்.

இந்நிலையில், கூலி கட்டுப்படியாகாததால் ஒரு குஞ்சுக்கு ரூ. 20 வீதம் வழங்க வேண்டும். இந்தப் பிரச்னை தொடா்பாக முத்தரப்புக் கூட்டம் நடத்தி உரிய தீா்வுகாண வேண்டும் என வலியுறுத்தி, எருமப்பட்டி சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த சிறு கறிக்கோழி வளா்ப்பு பண்ணை உரிமையாளா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

Dinamani
www.dinamani.com