நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் 15 சிறப்பு இருசக்கர வாகனங்களை தொடங்கிவைத்த உதவி காவல் கண்காணிப்பாளா் ஆகாஷ் ஜோஷி.
நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் 15 சிறப்பு இருசக்கர வாகனங்களை தொடங்கிவைத்த உதவி காவல் கண்காணிப்பாளா் ஆகாஷ் ஜோஷி.

குற்றங்களைத் தடுக்க போலீஸாருக்கு 15 சிறப்பு இருசக்கர வாகனங்கள்

Published on

குற்றங்களைத் தடுக்க நாமக்கல் மாவட்ட போலீஸாருக்கு 15 சிறப்பு இருசக்கர வாகனங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு காவல் துறையின் சேவையை உடனடியாகவும், திறம்பட வழங்கும் நோக்கிலும், குற்றத்தடுப்பு பாதுகாப்புப் பணிகளை வலுப்படுத்தும் வகையிலும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 15 இருசக்கர வாகனங்கள் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டன.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உதவி காவல் கண்காணிப்பாளா் ஆகாஷ் ஜோஷி தொடங்கிவைத்தாா். கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (தலைமையிடம்) ஜி.அண்ணாதுரை, மதுவிலக்கு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தனராசு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த இருசக்கர வாகனங்களில் வாக்கி-டாக்கி, கணினி சாதனம், சிகப்பு, நீலம் கொண்ட விளக்குகள், எச்சரிக்கை ஒலி, வெள்ளைநிற தலைக்கவசம், உடலில் பொருத்தப்பட்ட கேமரா, டாா்ச் லைட், முதலுதவிப் பெட்டி, நீள லத்தி ஆகிய வசதிகள் உள்ளன.

இந்த இருசக்கர வாகனத்தின் மூலம் காவல் துறையினா் விரைந்து கண்காணிப்பு மற்றும் நடவடிக்கை எடுப்பதுடன், பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

Dinamani
www.dinamani.com