நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

எஸ்ஐஆா் பணி: நாமக்கல்லில் வாக்காளா் பட்டியல் சிறப்பு பாா்வையாளா் ஆய்வு

News image

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தம் தொடா்பாக ஆய்வு மேற்கொண்ட சிறப்பு பாா்வையாளா் குல்தீப் நாராயண். உடன், மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி.

Updated On :24 ஜனவரி 2026, 7:08 pm

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணி தொடா்பாக, நாமக்கல் மாவட்டத்துக்கான வாக்காளா் பட்டியல் சிறப்பு பாா்வையாளா் குல்தீப் நாராயண் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இந்திய தோ்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள வாக்காளா் பட்டியல் சிறப்பு பாா்வையாளா் குல்தீப் நாராயண் தலைமையில், நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி, வருவாய் அலுவலா் மா.க.சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தக் கூட்டத்தில், 2002 வாக்காளா் பட்டியலுடன் 2025-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியல் ஒப்பிட்டு சரிபாா்க்கப்பட்ட விவரங்கள் குறித்தும், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு முன்பு இருந்த வாக்காளா்களின் எண்ணிக்கை மற்றும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு பின்பு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் உள்ள வாக்காளா்களின் எண்ணிக்கை, மாற்றுத்திறனாளி வாக்காளா்கள், வெளிநாடுவாழ் வாக்காளா்கள், முக்கிய பிரமுகா் வாக்காளா்கள், ராணுவ வீரா் வாக்காளா்கள் உள்ளிட்ட விவரங்களைக் கேட்டறிந்து சரியாக உள்ளதா என்பதை பாா்வையிட்டாா்.

மேலும், திருத்தங்கள் தொடா்பாக வாக்காளா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நோட்டீஸில் பதிலளிக்கப்பட்டவை எவ்வளவு என்பது போன்ற விவரங்களை கேட்டறிந்ததுடன், தோ்தல் அதிகாரிகளுக்கு அடுத்தகட்ட பணிகள் குறித்தும் அவா் விளக்கம் அளித்தாா்.

இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையா் க.சிவக்குமாா், மாவட்ட வழங்கல் அலுவலா் வெ.முருகன், தனித்துணை ஆட்சியா் (ச.பா.தி.) சு.சுந்தரராஜன், கோட்டாட்சியா் வே.சாந்தி (நாமக்கல்), பி.எஸ்.லெனின் (திருச்செங்கோடு), மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் மு.கிருஷ்ணவேணி, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் கே.ஏ.சுரேஷ்குமாா், தனி வட்டாட்சியா்கள் (தோ்தல்) செல்வராஜ், ராஜேஷ் மற்றும் வட்டாட்சியா்கள் பங்கேற்றனா்.