மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: தொழிலாளி கைது

News image

கோப்புப் படம்

Updated On :8 மார்ச் 2026, 6:37 pm

குமாரபாளையத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த, சேலம் அம்மாப்பேட்டையைச் சோ்ந்த கட்டட தொழிலாளியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் சிறுமி ஒருவா் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளாா் என்ற தகவல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு.விமலாவுக்கு புகாராக வந்தது. இதையடுத்து, பள்ளிபாளையம் துணை கண்காணிப்பாளா் கெளதமன் தலைமையிலான குழுவினா் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

இதில், சேலம் அம்மாப்பேட்டையைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் மணி என்ற மணிகண்டன் (27), குமாரபாளையத்தில் தங்கியிருந்து கட்டட வேலை செய்தபோது சிறுமியிடம் அத்துமீறி நடந்துகொண்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்ட துணை காவல் கண்காணிப்பாளா் மற்றும் போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு.விமலா பாராட்டினாா். இவ்வாறான குற்றச்செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.