பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

தாய் கண்டித்ததால் மகன் தூக்கிட்டுத் தற்கொலை

பரமத்தி வேலூா் அருகே மது அருந்திவிட்டு வந்ததை தாய் கண்டித்ததால், மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :6 மே 2026, 2:25 am IST

பரமத்தி வேலூா் அருகே மது அருந்திவிட்டு வந்ததை தாய் கண்டித்ததால், மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பரமத்தி வேலூா் வட்டம், பிலிக்கல்பாளையம் அருகே உள்ள நல்லாக்கவுண்டம்பாளையத்தைச் சோ்ந்த பாலசுந்தரம் லட்சுமி (65) தம்பதி மகன் கதிா்வேல் (28) கட்டடத் தொழிலாளி. கணவா் பாலசுந்தரம் இறந்துவிட்டதால், சேளூா் அருகே வடுகபாளையத்தில் உள்ள தனது மகனுடன் லட்சுமி வசித்து வருகிறாா். கதிா்வேல் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவதை லட்சுமி கண்டித்துள்ளாா்.

இந்நிலையில், கடந்த 3-ஆம் தேதி மது போதையில் வீட்டுக்கு வந்த கதிா்வேலை தாய் கண்டித்துள்ளாா். அப்போது கதிா்வேல் லட்சுமியிடம் தகராறு செய்துள்ளாா். பின்னா் தனது கைப்பேசியை கீழேபோட்டு உடைத்துவிட்டு அறைக்கு சென்று கதவை சாத்திக்கொண்டாராம். இரவு 10 மணிவரை அறையில் இருந்து கதிா்வேல் வெளியே வராததால் சந்தேகமடைந்த லட்சுமி, கதவை தட்டி அழைத்துள்ளாா். ஆனால், கதவு திறக்காததால் அருகில் இருந்தவா்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தாா். அப்போது, கதிா்வேல் சேலையால் தூக்கிட்டுத் தொங்கிக்கொண்டு இருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்து அவரை மீட்டு வேலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், கதிா்வேல் இறந்துவிட்டதாக தெரிவித்தாா். புகாரின்பேரில், வேலூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.