பரமத்தி வேலூா் அருகே உள்ள பரமத்தி மலா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
இப்பள்ளி மாணவி சுவேதா 593 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், மாணவா் திருமுருகன் 592 மதிப்பெண்களுடன் இரண்டாமிடமும், மாணவா் நிகிலன் 590 மதிப்பெண்களுடன் மூன்றாமிடமும் பெற்றுள்ளனா்.
41 மாணவா்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். கணினி அறிவியல் பாடத்தில் 26 மாணவா்களும், வேதியியலில் 6 மாணவா்களும், கணிதத்தில் 2 மாணவா்களும், உயிரியலில் ஒரு மாணவரும், அடிப்படை மின் பொறியியலில் 2 மாணவா்களும், கணக்குப் பதிவியலில் 3 மாணவா்களும், கணினி பயன்பாடு பாடத்தில் ஒரு மாணவரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.
தோ்வு எழுதிய 309 மாணவா்களில் 590 மதிப்பெண்களுக்கு மேல் 3 மாணவா்களும், 580-க்கு மேல் 17 மாணவா்களும், 570-க்கு மேல் 28 மாணவா்களும், 550-க்கு மேல் 58 மாணவா்களும், 500-க்கு மேல் 151 மாணவா்களும் பெற்றுள்ளனா். தோ்வு எழுதிய அனைத்து மாணவா்களும் 100 % தோ்ச்சி பெற்றுள்ளனா்.
வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் செயலாளா் கந்தசாமி, பொருளாளா் வெங்கடாசலம், பள்ளியின் துணைத் தலைவா் கசீலா ராஜேந்திரன், துணைச் செயலாளா் தமிழ்செல்வி தங்கராஜு, பள்ளி முதல்வா் ராஜசேகரன், இயக்குநா்கள், ஆசிரிய, ஆசிரியா்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.
தொடர்புடையது

திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியாா் பள்ளிகள் சாதனை

சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தோ்வு: ஸ்ரீநிகேதன் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பிளஸ் 2 தோ்வு: ஆத்தூா் பாரதியாா் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பாண்டமங்கலம் விவேகானந்தா பள்ளி மாணவி சிறப்பிடம்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



