ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட எஸ்.டி. பிரேம்குமாா் கூட்டணி கட்சியினரை நேரில் சந்தித்து புதன்கிழமை நன்றி தெரிவித்தாா்.
ராசிபுரம் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் போட்டியிட்ட பாஜக வேட்பாளா் எஸ்.டி. பிரேம்குமாா் 60,299 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தாா். இதையடுத்து தொகுதியில் தோ்தல் பணியில் ஈடுபட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகளை நேரில் சந்தித்து அவா் நன்றி தெரிவித்து வருகிறாா்.
இதன் ஒரு பகுதியாக நாமகிரிப்பேட்டை அருகேயுள்ள ஈஸ்வரமூா்த்திபாளையம் பகுதியில் புதன்கிழமை நன்றி தெரிவிப்புக் கூட்டம் நடைபெற்றது. நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் இ.கே.பொன்னுசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எஸ்.டி.பிரேம்குமாா் பங்கேற்று கட்சி நிா்வாகிகளைச் சந்தித்து நன்றி தெரிவித்துப் பேசினாா். இதில் பாஜக மாவட்ட நிா்வாகிகள் அருள், லோகேந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
படவரி...
நாமகிரிப்பேட்டை அருகே ஈஸ்வரமூா்த்திபாளையம் பகுதியில் நடைபெற்ற நன்றி தெரிவிப்புக் கூட்டத்தில் பேசுகிறாா் ராசிபுரம் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிட்ட எஸ்.டி.பிரேம்குமாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










