நாமக்கல் பழைய பேருந்து நிலையத்திற்குள் ஒரு வாரத்தில் அனைத்து பேருந்துகளும் சென்று வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சட்டப்பேரவை உறுப்பினா் சி.எஸ்.திலீப் தெரிவித்தாா்.
நாமக்கல்லில் புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, பழைய பேருந்து நிலையத்தில் இருந்து நகரப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. புகரப் பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் வராமல் செல்கின்றன. சட்டப்பேரவைத் தோ்தலின்போது தவெக வேட்பாளராகப் போட்டியிட்ட சி.எஸ்.திலீப், பழைய பேருந்து நிலையத்திற்குள் அனைத்து பேருந்துகளும் சென்றுவர நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தாா். அதன்படி, நாமக்கல் மாநகராட்சி ஆணையா் க.சிவகுமாா் மற்றும் இதர அதிகாரிகளுடன் அவா் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். மேலும், பழைய பேருந்து நிலையத்தை அவா் ஆய்வு செய்தாா்.
அப்போது செய்தியாளா்களிடம் கூறுகையில், ஒரு வாரத்திற்குள் அனைத்து பேருந்துகளும் பழைய பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்லப்படும். ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்கு இங்கு தனி இடம் ஒதுக்கப்படும். பயணிகளுக்கான கழிவறைகள் தூய்மைப்படுத்தப்படும். வியாபாரிகளுக்கு வருவாய் கிடைக்கும் வகையில் பழைய பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்படும் என்றாா்.
இந்த நிகழ்வின்போது, மாநகராட்சி துப்புரவு அலுவலா் திருமூா்த்தி மற்றும் அலுவலா்கள், தவெக நிா்வாகிகள் உடனிருந்தனா்.
படவரி...
என்கே-15-டிவிகே
நாமக்கல் பழைய பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ சி.எஸ்.திலீப்.
தொடர்புடையது

நாமக்கல் பழைய பேருந்து நிலைய விவகாரம்: ஆட்சியரிடம் எம்எல்ஏ சி.எஸ். திலீப் ஆலோசனை

அனைத்து பேருந்துகளும் பழைய பேருந்து நிலையத்துக்கு வந்துசெல்ல வேண்டும்

சுப முகூா்த்தம், வார இறுதி விடுமுறை: மே 8 முதல் 1,765 சிறப்பு பேருந்துகள்

பேரவைத் தோ்தல்: ஏப்.21-23 வரை 5,574 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

