பரமத்தி வேலூரில் இருசக்கர வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு
உயிரிழப்பு - கோப்புப் படம்
பரமத்தி வேலூரில் இருசக்கர வாகனம் மோதியதில் காயமடைந்த மூதாட்டி உயிரிழந்தாா்.
பரமத்தி வேலூா் முஸ்லிம் தெருவைச் சோ்ந்தவா் மொய்தீன் பாஷா (80). இவரது மனைவி ஷபியா பீபீ (74). இவா் சனிக்கிழமை வேலூா் காமராஜா் சிலை அருகே சாலையை கடக்க முயன்றாா். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் அவா் மீது மோதியது.
இதில் கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்த ஷபியா பீபீயை அங்கிருந்தவா்கள் மீட்டு வேலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக திருச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்து வேலூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
மேலும், விபத்தில் காயமடைந்த இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த பரமத்தி வேலூரைச் சோ்ந்த ஞானசெல்வன் (30) வேலூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

