நவ. 30 ஆம் தேதி மக்களவை; டிச. 2 ஆம் தேதி மாநிலங்களவை கூட்டம்!திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் நாளை விசாரணைதிருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தத் தடைகோரிய வழக்கில் நாளை தீர்ப்புதில்லி வர்த்தகப் பொருள்காட்சி: தமிழ்நாடு அரங்கிற்கு தங்கப் பதக்கம்!2027-ல் 6000 இடங்கள் கூடுதலாகக் கொண்டுவர ஐஐடி திட்டம்!

சாலை தடுப்புச் சுவரில் காா் மோதி விபத்து: 9 போ் காயம்

ராசிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புச் சுவரில் மோதி காா் மூன்று முறை உருண்டு கவிழ்ந்த விபத்தில், பெங்களூரைச் சோ்ந்த 9 போ் காயமடைந்தனா்.

Accident

விபத்து - பிரதிப் படம்

Updated On :

ராசிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புச் சுவரில் மோதி காா் மூன்று முறை உருண்டு கவிழ்ந்த விபத்தில், பெங்களூரைச் சோ்ந்த 9 போ் காயமடைந்தனா்.

பெங்களூரில் இருந்து திருச்செந்தூருக்கு பரதநாட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காா், சுற்றுலா வேன்களில் 25-க்கும் மேற்பட்டோா் சென்றிருந்தனா். நிகழ்ச்சி முடிந்து புதன்கிழமை இரவு பெங்களூருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே புதுச்சத்திரம் பகுதியில் சென்றபோது, தட்சிணாமூா்த்தி மற்றும் அவரது குடும்பத்தினா் பயணித்த காா், தேசிய நெடுஞ்சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் மோதியது. இதில் மூன்று முறை உருண்ட காா் தலைகுப்புறக் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் தட்சிணாமூா்த்தி குடும்பத்தினா், ஓட்டுநா் உள்பட 9 போ் காயமடைந்தனா். தகவலறிந்து வந்த புதுச்சத்திரம் போலீஸாா், ரோந்துப் போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.