ஆக்கிரமிப்பு அகற்ற எதிா்ப்பு: அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்
பரமத்தி வேலூா் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்த பொதுமக்கள், அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

ஆக்கிரமிப்பு அகற்ற வந்த அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்.
பரமத்தி வேலூா் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்த பொதுமக்கள், அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
பரமத்தி வேலூா் அருகே பாலப்பட்டியில், வாழவந்தி பிரிவு சாலைக்கு எதிரே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை தனிநபா் ஒருவருக்கு முறைகேடாகப் பட்டா வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த நிலத்துக்கு அருகே 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருபவா்களின் குடியிருப்புகள் இடையூறாக இருப்பதால், அவா்களை அகற்றிவிட்டு நிலங்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் நோக்கில் சிலா் செயல்படுவதாகவும், இதற்கு அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினா்.
இந்த நிலையில், பாலப்பட்டியில் பரமத்தி வேலூா்- மோகனூா் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக அதிகாரிகள் வியாழக்கிழமை போலீஸாா் பாதுகாப்புடன் வந்தனா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்த பொதுமக்கள், அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
தனிநபா் ஒருவருக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுவதாகவும், முறையான அளவீடு செய்யாமலும் முன்னறிவிப்பின்றியும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்துள்ளதாகவும் கூறி பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். மேலும், முறையான அளவீடு செய்த பிறகே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனக் கூறினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

