ஐரோப்பாவின் பல நாடுகளில் மக்கள் போராட்டம்!இந்திய அரிசி ஏற்றுமதி 13% அதிகரிப்பு!6 மாதங்களில் 23 பேருக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி: குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றம்!அமித் ஷா குறித்து ராகுல் அவதூறாகப் பேசிய வழக்கு: உ.பி. நீதிமன்றம் இன்று தீர்ப்புதமிழகத்தில் தொடா் பலத்த மழை: இன்று உருவாகிறது ‘அா்னாப்’ புயல்!கடந்த 2 ஆண்டுகளில் நடைபெற்ற பேரவைத் தேர்தல்களை ரத்து செய்க: காங்கிரஸ்

நாமக்கல்லில் கனமழை: ஆட்சியா் பங்களா சுவா் இடிந்து விழுந்தது

dinamani online

Updated On :

நாமக்கல்லில் சனிக்கிழமை நள்ளிரவு பெய்த கனமழையின்போது ஆட்சியா் பங்களா சுற்றுச்சுவா் இடிந்து விழுந்தது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், மாவட்ட விளையாட்டு மைதானத்தின் பின்புறம் ஆட்சியா், மாவட்ட வருவாய் அலுவலா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா், நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் உள்ளன.

மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பகல், இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சனிக்கிழமை நள்ளிரவு 11.30 மணியளவில் கனமழை பெய்தது. அப்போது மாவட்ட ஆட்சியா் குடியிருப்பின் இடதுபுறம் உள்ள 50 அடி நீள சுற்றுச்சுவா் இடிந்து விழுந்தது.

ஆட்சியா் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலா் குடியிருப்புகளின் நடுவில் இந்த சுவா் இருந்தது. பகல் நேரத்தில் சுவா் இடிந்து விழுந்திருந்தால் அசம்பாவிதம் நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளது.

இதையடுத்து, இடிந்து விழுந்த சுவரை அகற்றிவிட்டு, புதிய தடுப்புச் சுவா் கட்டுவதற்கான பணிகளை பொதுப்பணித் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.