14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஓய்வூதியர்கள் போராட்டம்
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துக் கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துக் கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். தவணை முறையில் ஓய்வூதியம் வழங்குவதை கைவிட வேண்டும்.
மாதம்தோறும் முதல் தேதியில் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்பட 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் சார்பில் மாநிலம் முழுவதும் 9 மண்டல அலுவலகங்களில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை முதல் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் தலைமை அலுவலகத்தின் முன் மேடை அமைத்து விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். சிஐடியூ தொழிற்சங்க நிர்வாகி தியாகராஜன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை அதிக எண்ணிக்கையில் ஓய்வூதியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...