சுதந்திர தின விழாக் கொண்டாட்டம்

சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. 
Published on
Updated on
1 min read

சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. 
விழாவுக்கு வருவாய் கோட்டாட்சியர் டி.ராமதுரைமுருகன் தலைமை வகித்து கொடியேற்றினார்.  வட்டாட்சியர் கே.அருள்குமார், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ஜெயக்குமார், மண்டல துணை வட்டாட்சியர் சிவராஜ், தேர்தல் துணை வட்டாட்சியர் ரமேஷ் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அக்கமாபேட்டை காந்தி சிலைக்கு ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்கள் முனியப்பன், மாரிமுத்து ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மக்கள் மன்ற இணைச் செயலர் எஸ்.டிஎஸ்.கனகராஜ் கொடியேற்றினார். தேவண்ணகவுண்டனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ரா.பூமலை கொடியேற்றினார்.
ஏற்காட்டில்...
ஏற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் சுமதி கொடியேற்றினார். வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆணையர், காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் கொடியேற்றினர். மாண்ட்போர்ட் பள்ளி, அரசு மேல்நிலைப் பள்ளி, நசரேத் மேல்நிலைப் பள்ளி, சேகரட்ஹேர்ட்  மேல்நிலைப்பள்ளி, புனித சூசையப்பர் தொடக்க, மேல்நிலைப் பள்ளிகள், செயின்ட் சார்லஸ் சிபிஎஸ்இ பள்ளி, சேர்வராய்ஸ் வேலி சிபிஎஸ்இ பள்ளி, சேர்வராய்ஸ் கலை, அறிவியல் கல்லூரி அன்னை வேளாங்கண்ணி பள்ளிகளில் கலை நிகழ்ச்சிகளுடன் விழா கொண்டாடப்பட்டது.
இதேபோல், ஏற்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளி, மாரமங்கலம்  ஊராட்சி பள்ளி, முளுவி, நாகலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
ஏற்காடு ரோட்டரி சங்கம் மற்றும் ரோட்டா ஸ்யோர்டஸ் இணைந்து பள்ளி குழந்தைகளுக்கு விளையாட்டு விழா, பள்ளி சீருடைகள், பரிசுகள் வழங்கும் விழாவை நடத்தியது. வெள்ளக்கடை  ஊராட்சி மேல்நிலைப் பள்ளி வளகத்தில் ரோட்டரி தலைமை விருந்தினர் பிரபாகரன் கொடியசைத்து விழாவை தொடக்கி வைத்தார். ஏற்காடு ரோட்டரி சங்கத்  தலைவர் கே.ராஜேந்திரன்  சிறப்புரையாற்றினார்.
ஓமலூரில்...
 சேலம் மேற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற விழாவுக்கு, மேற்கு மாவட்டத் தலைவர் சுசீந்திரகுமார் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கோடியேற்றினார். தொடர்ந்து தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியை அனைவரும் எடுத்துக்
கொண்டனர். 
இதேபோன்று சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், காந்தி, அம்பேத்கர், காமராஜர் ஆகியோர் சிலைகளுக்கு மாவட்டத் தலைவர் முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.