சேலம் கோட்டை பகுதியில் தெருவில் நிறுத்தியிருந்த 5 இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
சேலம் டவுன் கோட்டை பகுதியில் வெங்கிடசாமி தெரு மற்றும் சின்னசாமி தெருவில் ஏராளமானோர் குடியிருந்து வருகின்றனர். இப்பகுதியில் குடியிருப்பவர்கள் தங்களது இருசக்கர வாகனங்களை சாலை ஓரத்தில் நிறுத்தி வைப்பது வழக்கம். இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை தெருவில் நிறுத்தி இருந்த 5 இருசக்கர வாகனங்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்துவிட்டு தப்பி ஓடியதாகத் தெரிகிறது. இதனிடையே தீ விபத்தை அறிந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். இது தொடர்பாக, சேலம் டவுன் காவல் நிலையப் போலீஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, அவர்கள் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விசாகப்பட்டினம் எஃகு ஆலை விபத்து: 9 ஆக உயர்ந்த பலி!

ரேவதி, ராதிகா, ராதா... ர வரிசையில் பெயர் சூட்டிய பாரதிராஜாவின் ஃபார்முலா!
இனி அண்ணாமலை vs விஜய்! பாஜகவிலிருந்து அமர் பிரசாத் ரெட்டி விலகல்!

பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


