நிலத்தை விற்க முடியாத விரக்தியில், ஷட்டர் கடை உரிமையாளர் தனது குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
சேலத்தை அடுத்த தேக்கம்பட்டி காந்தி நகரைச் சேர்ந்தவர் தங்கராஜ் (45). இவரது மனைவி வீரம்மாள். இவர்களுக்கு கார்கி, காந்தவர்ஷினி என இரு மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில், தங்கராஜ் தனது மனைவி, 2 மகள்களுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வருகை தந்தார். அப்போது, நுழைவு வாயில் வந்ததும் தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக் கொள்ள, மற்ற மூவரும் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டனர். இதையடுத்து, 4 பேரும் தீக்குளிக்க முயன்றனர்.
இதையடுத்து, அவர்கள் மீது தண்ணீரை போலீஸார் தண்ணீரை ஊற்றினர். இதைத் தொடர்ந்து அவர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், கடைகளுக்கு போடப்படும் ஷட்டர் கதவுகளை தயார் செய்து விற்பனை செய்யும் கடையை தங்கராஜ் நடத்திவந்துள்ளார். இந்த நிலையில், கடையின் வளர்ச்சிக்காக பல்வேறு இடங்களில் ரூ.5 லட்சம் வரை தங்கராஜ் கடன் வாங்கினாராம். கடனை திருப்பிச் செலுத்த, தனது 25 சென்ட் நிலத்தை விற்பனை செய்ய முடிவு செய்தாராம். ஆனால், நிலத்தை விற்பதற்கு அவரது உறவினர் எதிர்ப்புத் தெரிவித்ததால், கடனை அடைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குடும்பத்துடன் தங்கராஜ் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




