சேலத்தில் லலிதா ஜூவல்லரி நகைக் கடைத் திறப்பு விழா
தங்க நகை விற்பனையில் தமிழகத்தில் முன்னணி வகித்து வரும் லலிதா ஜூவல்லரியின் 16 ஆவது கிளை ஞாயிற்றுக்கிழமை (பிப்.4) சேலத்தில் திறந்து வைக்கப்பட்டது.


தங்க நகை விற்பனையில் தமிழகத்தில் முன்னணி வகித்து வரும் லலிதா ஜூவல்லரியின் 16 ஆவது கிளை ஞாயிற்றுக்கிழமை (பிப்.4) சேலத்தில் திறந்து வைக்கப்பட்டது.
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே சொர்ணபுரியில் லலிதா ஜூவல்லரியின் புதிய கிளை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. விநாயகா மிஷன்ஸ் கல்வி குழுமங்களின் தலைவர் அன்னபூரணி சண்முகசுந்தரம் புதிய கிளையை ரிப்பன் வெட்டி தொடக்கி வைத்தார்.
முருகாலயா சில்க்ஸ் உரிமையாளர் பழனிசாமி குத்து விளக்கேற்றி வைத்தார். லலிதா ஜூவல்லரி உதவி மேலாளர்கள் பாலகிருஷ்ணன், ஞானபண்டிதன், சௌந்திரராஜன் ஆகியோர் பங்கேற்றனர். இதுகுறித்து லலிதா ஜூவல்லரி தலைவர் எம். கிரண்குமார் கூறியிருப்பதாவது:
லலிதா ஜூவல்லரியில் வைர நகைகளுக்கென தனிப்பிரிவு இயங்கி வருகிறது. உலகத்தரம் வாய்ந்த நுணுக்கமான வடிவமைப்புகளுடன் சர்வதேச தர சான்றிதழ் பெற்ற வைர நகைகள் இந்தியாவிலேயே குறைந்தவிலையில் கிடைக்கும். வெள்ளிப் பொருள்களுக்கும் தனி பிரிவு உண்டு.
வெள்ளிப் பொருள்களை மார்கெட்டிலேயே குறைந்த விலையில் அளிக்கிறோம். தவணை முறை நகை வாங்கும் திட்டங்களிலும், வாடிக்கையாளர்களுக்கு பயன் தரும் புதுமைகளை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
நகை சேமிப்புத் திட்டம் (முதல் மாத தவணை இலவசம்) மற்றும் அட்வான்ஸ் நகை திட்டம் ஆகிய திட்டங்களில் சேதாரம் இல்லாமல் தங்க நகைகளை வாங்கி பயனடையலாம். திறப்பு விழா சலுகையாக மிக குறைந்த சேதாரத்தில் இருந்து மேலும் 1 சதவீதம் குறைவு. இது ஒரு குறுகிய கால சலுகையாம். முத்து, பவளம், நவரத்தினம், அமெரிக்கன் டைமண்ட், சாதா கற்கள், சிந்தடிக் கற்கள் கொண்ட தங்க நகைகளுக்கு பிரத்யேக எடைத் தள்ளுபடி வழங்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...