எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

வாழப்பாடி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்  11, 12 -ஆம் வகுப்பு ஆங்கில வழி கல்வி தொடங்க கோரிக்கை

வாழப்பாடி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்,  11, 12-ஆம் வகுப்பில் ஆங்கில வழி கல்வி தொடங்க வேண்டுமென, பொதுமக்கள், பெற்றோர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 4:40 am

DIN

வாழப்பாடி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்,  11, 12-ஆம் வகுப்பில் ஆங்கில வழி கல்வி தொடங்க வேண்டுமென, பொதுமக்கள், பெற்றோர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 
வாழப்பாடி பேரூராட்சி புதுப்பாளையத்தில் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், வாழப்பாடி மற்றும்  அதன் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட மாணவியர் பயின்று வருகின்றனர். 
சுற்றுப்புற பகுதியில் இயங்கும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரை ஆங்கில வழியில் பயின்ற மாணவியரின் நலன் கருதி, வாழப்பாடி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை ஆங்கில வழி வகுப்புகள் துவக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகளை விஞ்சும் வகையில், வாழப்பாடி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆங்கில வழி மாணவியர், அதிக விழுக்காடு தேர்ச்சி,  மதிப்பெண்களும் பெற்று வருகின்றனர். ஆனால், 11,12-ஆம் வகுப்பில் தமிழ் வழியில் மட்டுமே சேர்க்கை நடைபெறுவதால், சேலம், ஆத்தூரில் இயங்கும் அரசு பள்ளிகள் அல்லது தனியார் பள்ளிகளுக்கு செல்ல வேண்டிய நிலை நீடித்து வருகிறது.
 எனவே,  வாழப்பாடி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11, 12-ஆம் வகுப்பில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க வேண்டுமென அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு  கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து வாழப்பாடி பேரூராட்சி முன்னாள் வார்டு உறுப்பினர் கமல்ராஜா கூறியதாவது:
வாழப்பாடி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் எதிர்வரும் 2018-19-ஆம் கல்வியாண்டில் 11-ஆம் வகுப்பிலும், அடுத்தாண்டில் இருந்து 12-ஆம் வகுப்பிலும் ஆங்கில வழி கல்வியை தொடங்க வேண்டுமென, பொதுமக்கள் மற்றும் வாழப்பாடி நகர வளர்ச்சிக்குழு சார்பில், மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கும்,  தமிழக அரசுக்கும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.