திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சேலம் மாவட்டத்தில் 6-ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு இன்று பயிற்சி தொடக்கம்

சேலம் மாவட்டத்தில் 6-ஆம் வகுப்புக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு புதிய பாடத் திட்டம் குறித்து, திங்கள்கிழமை (இன்று)  முதல் பாடவாரியாக ,  பயிற்சி அளிக்கப்படுகிறது.  

News image
Updated On :9 ஜூலை 2018, 3:50 am

DIN

சேலம் மாவட்டத்தில் 6-ஆம் வகுப்புக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு புதிய பாடத் திட்டம் குறித்து, திங்கள்கிழமை (இன்று)  முதல் பாடவாரியாக ,  பயிற்சி அளிக்கப்படுகிறது.  
தமிழகம் முழுவதும் 1, 6, 9, 11-ஆம் வகுப்புகளுக்கு நடப்பு கல்வியாண்டில் புதிய பாடத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் தங்களது ஸ்மார்ட்போன்கள் மூலம் பாடம் நடத்த, புதிய புத்தகங்களில் கியூஆர் கோடு அச்சிடப்பட்டுள்ளது. இதனைக் கற்பிப்பது குறித்த பயிற்சி அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் நடத்தப்பட உள்ளது.  
அதில்,  சேலம் மாவட்டத்தில் ஜூலை 9 முதல் (திங்கள்கிழமை)   21-ஆம் தேதி வரை அடுத்தடுத்து இருநாள்கள் அந்தந்த வட்டாரத்திலுள்ள அனைவருக்கும் கல்வி இயக்க,  வள மையத்தில் பயிற்சி நடைபெறுகிறது.  பழைய சேலம் கல்வி மாவட்டத்தில் இருந்த ஒன்றியங்களில்  ஜூலை 9, 10 -இல்  கணிதம், 11,12-இல்  சமூகவியல்,  13, 14-இல்  தமிழ்,  16,17-இல்  அறிவியல்,  18, 19-இல்  ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்குரிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி நடைபெற உள்ளது.
அதேபோல் பழைய சங்ககிரி கல்வி மாவட்டத்தில் இருந்த ஒன்றியங்களுக்கு ஜூலை 9,10-இல் சமூகவியல், 11,12-இல் கணிதம்,  13,14-இல் அறிவியல், 16,17-இல்  தமிழ்,  20,21-இல்  ஆங்கிலம் பாடங்களுக்குரிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.