வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

வாகன விபத்தில் பெண் உயிரிழப்பு

சங்ககிரி புதிய பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனம் நிலைதடுமாறியதில் கீழே விழுந்த பெண் உயிரிழந்தார். 

Updated On :9 ஜூலை 2018, 3:48 am

சங்ககிரி புதிய பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனம் நிலைதடுமாறியதில் கீழே விழுந்த பெண் உயிரிழந்தார். 
சேலம் அருகே உள்ள பெரியசீரகாபாடி பகுதியைச் சேர்ந்த சுப்பராயன் மகன் கோபி. இவர் சனிக்கிழமை தனது தாய் பாப்பாவுடன் (50) இருசக்கர வாகனத்தில் சேலத்திலிருந்து சங்ககிரி நோக்கி வந்துள்ளார். அப்போது சங்ககிரி, புதிய பேருந்து நிலையம் அருகே எதிர்பாராதவிதமாக நாய் குறுக்கே வந்ததால் இரு சக்கர வாகனம் நிலைதடுமாறியதில் கீழே விழுந்த  பாப்பா பலத்த காயமடைந்தார். இதையடுத்து தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.   
இந்த விபத்து குறித்து சங்ககிரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.