சங்ககிரி -பவானி பிரதான சாலையிலிருந்து சங்ககிரி மலையடிவாரத்துக்கு செல்லும் சிமென்ட் சாலையை செப்பனிட வேண்டுமென சங்ககிரி பேரூராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சங்ககிரி -பவானி பிரதான சாலையில் இருந்து சங்ககிரி மலையடிவாரத்துக்கு செல்லும் சிமென்ட் சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பேரூராட்சியின் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் போடப்பட்டது. அந்த சாலை பல இடங்களில் சேதமடைந்த நிலையில் உள்ளது. இந்தச் சாலையைப் பயன்படுத்தி பள்ளி மாணவ, மாணவிகள், மலைக்குச் செல்லும் பக்தர்கள், மசூதிகளுக்கு தொழுகைக்குச் செல்லும் இஸ்லாமியர்கள், ஈஸ்வரன் கோயில் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றுவரும் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமமடைந்து வருகின்றனர். மலையடிவாரத்தில் இருந்து பவானி பிரதான சாலை வரை உள்ள கழிவு நீர் சாக்கடைகளை தூர்வாராததால் கழிவு நீர் சாலைகளில் வழிந்து செல்கின்றது. மேலும், சாலையோரங்களில் கருவேலம் மரங்கள் வளர்ந்து வருவதால் அந்தச் சாலை வழியாகச் செல்லும் தனியார் பள்ளி வேன்கள், நூற்பாலைக்குச் செல்லும் வேன்கள் மாற்றுப் பாதையில் சென்று வருகின்றன. பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 18-ஆம் தேதி தீரன்சின்னமலை நினைவு நாளில் அமைச்சர்கள் விடுதலைப் போராட்ட வீரருக்கு மரியாதைச் செலுத்த இந்தப் பாதையை பயன்படுத்துவதால் அன்று ஒரு நாள் மட்டும் தற்காலிமாக சுத்தம் செய்து வருகின்றனர் பொதுமக்கள்
தெரிவிக்கின்றனர்.
எனவே, சங்ககிரி பேரூராட்சி நிர்வாகம் பல்வேறு இடங்களில் சேதமடைந்துள்ள மலையடிவாரத்துக்குச் செல்லும் சிமென்ட் சாலையை செப்பனிட வேண்டும். மேலும், கழிவு நீர் சாக்கடையை தூர்வாரவும், அப்பகுதியில் உள்ள கருவேலம் மரங்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்து முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு!

மகர ராசிக்கு இன்று எப்படி? தினப்பலன்கள்!

10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ கணித மதிப்பெண் சரிவு: மறு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள்!

தமிழக டிஜிபி நியமன உத்தரவில் திருத்தம் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் திமுக மனு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

