எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

விநாயகா மிஷன் நிகர்நிலை பல்கலை.யில் பட்டமளிப்பு விழா

சேலம் விநாயகா மிஷன் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 2,391 பேருக்கு பட்ட சான்றிதழ் வழங்கப்பட்டது.

Updated On :9 ஜூலை 2018, 3:48 am

சேலம் விநாயகா மிஷன் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 2,391 பேருக்கு பட்ட சான்றிதழ் வழங்கப்பட்டது.
சேலம் விநாயகா மிஷன்ஸ் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் 11-ஆ வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
கிருபானந்தவாரியார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அன்னபூர்ணா கலையரங்கத்தில் விநாயகா மிஷன் பல்கலைக்கழக வேந்தர் ஏ.எஸ்.கணேசன் தலைமையில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் வி.ஆர்.ராஜேந்திரன் வரவேற்றார்.
விழாவில் அறங்காவலர் அன்னபூர்ணி சண்முகசுந்தரம், இணை வேந்தர் டத்தோ ஸ்ரீ எஸ்.சரவணன், பல்கலைக்கழகத் துணைத் தலைவர்கள் ஜே.எஸ்.சதீஷ்குமார், என்.வி.சந்திரசேகர், இயக்குநர்கள் டத்தின் ஸ்ரீ காமாட்சி சரவணன், அனுராதா கணேசன், சுமதி சதீஷ்குமார், அருணாதேவி சந்திரசேகர், என்.ராமசாமி, கே.ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் கோவை வேதநாயகம் மருத்துவமனை மருத்துவ இயக்குநர் மற்றும் சிறுநீரக துறைத் தலைவர் எஸ்.வி.கந்தசாமி, மகாராஷ்டிர காராட் கிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தர் வேத்பிரகாஷ் மிஸ்ரா, நாட்டுப்புற கலைஞர் விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன், நாட்டிய கலைஞர் ஷோபனா சந்திரகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். 
விழாவில் விநாயகா மிஷன் நிகர்நிலை பல்கலைக்கழக இணை துணை வேந்தர் பேராசிரியர் ஒய்.ஆபிரகாம், பதிவாளர் பி.ஜெய்கர், இயக்குநர் சபரிநாதன், தேர்வுக் கட்டுபாட்டு அலுவலர் சி.எல்.பிரபாவதி, இணைப் பதிவாளர்கள் பி.முருகேசன், எஸ்.சாந்தி, பி.தனசேகரன், இயக்குநர் பி.ஞானசேகர், துணை இயக்குநர்கள் ஆர்.எஸ்.சண்முகசுந்தரம், எஸ்.சூர்யநாராயணன் மற்றும் மருத்துவ கல்லூரி புல மருத்துவர்கள், அனைத்துக் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள், விம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து
கொண்டனர்.
மருத்துவம்,  பல் மருத்துவம், ஹோமியோபதி, பார்மசி, நர்சிங், பிசியோதெரபி, பொறியியல், கட்டடக் கலை, மேலாண்மை, கம்ப்யூட்டர் அப்ளிகேசன்ஸ், அலைடு ஹெல்த் சயின்ஸ், கலை மற்றும் அறிவியல், கல்வியியல், உடற் கல்வியியல் ஆகிய கல்லூரிகளின் முனைவர் , முதுநிலை மற்றும் இளநிலை பிரிவுகளில் 2391 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர்.  இவர்களில் 27 பேர் முனைவர் பட்டமும், 77 பேர் தங்கப் பதக்கமும், 58 பேருக்கு வெள்ளி பதக்கமும், 47 பேருக்கு வெண்கல பதக்கமும், முதல் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடம் பெற்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.