ஆட்டையாம்பட்டி அருகே உள்ள நைனாம்பட்டி கிராமத்தில் வீரபாண்டி வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மைத் திட்டத்தின் கீழ் (அட்மா) மண்வள மேம்பாடு மற்றும் பண்ணைக் கழிவு மேலாண்மை குறித்த தொழில்நுட்ப பயிற்சி விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது.
இம்முகாமில் பண்ணைக் கழிவுகளைப் பயன்படுத்தி பயிர்களில் உரத் தேவைகளைக் குறைத்தல், அங்கக முறை விவசாயம் மூலம் மண்வள மேலாண்மை முறைகள், மண் மாதிரி எடுத்தல், சரியான உர பரிந்துரை, ஊட்டச்சத்து சார்ந்த மானிய விவரங்கள் மற்றும் மானாவாரி மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்தும் இம்முகாமில் எடுத்துரைக்கப்பட்டது. மேலும், இந்தப் பயிற்சி முகாமில் வீரபாண்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொறுப்பு) பா.கார்த்திகாயினி, துணை வேளாண்மை அலுவலர் தே.சீனிவாசன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் கே.ராஜேந்திரன், உதவி வேளாண் அலுவலவர்கள் மா.பிரகாஷ், ஆ.சிவசங்கர், உதவித் தொழில்நுட்ப மேலாளர்கள் சி.சரஸ்வதி, சி.சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர் இப்பயிற்சியின் போது விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம்
அளிக்கப்பட்டது.
இதில் நான்கு அடி ஆழமுள்ள உள்ள குழியில் பயிர் கழிவுகளையிட்டு பாஸ்பேட் மற்றும் யூரியா உரங்கள் கலந்து அதனுடன் சாணக் கரைசலைத் தெளித்து மக்குவதற்கான செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








