சேலம் மாவட்டம், கெங்கவல்லியில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு விழா வியாழக்கிழமை (மார்ச் 29) காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை நடைபெற உள்ளது.
இந்த ஜல்லிக்கட்டு விழாவில் மதுரை, பெரம்பலூர், லால்குடி, தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களில் இருந்து மொத்தம் 450 க்கும் மேற்பட்ட காளைகளுக்கு முறையாக பாக்கு, வெற்றிலை வைத்து விழாக்குழுவினர் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாடுபிடி வீரர்கள் 300-க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். காளைகளை பரிசோதனை செய்து முறையாக அனுப்ப கால்நடைத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். காளைகளுக்கு அவசர சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை சார்பில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பி. ராஜன் தலைமையில் 400-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
விழாவில் பங்கேற்கும் அனைத்துக் காளைகளின் உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் விழாக்குழுவினர் சார்பில் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. விழாவைக் காண சுமார் 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தம்மம்பட்டி, ஆத்தூரிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தொகுதி அலசல் - அம்பாசமுத்திரம்! முழு நம்பிக்கையில் காங்கிரஸ்!
மேற்கு வங்கத்தில் பெரும்பான்மை மக்களுக்கு அச்சுறுத்தலை உருவாக்குகிறாா் மம்தா - அமித் ஷா குற்றச்சாட்டு
எனக்கு எதிராக மத்திய அரசும், 19 மாநில அரசுகளும் களத்தில் உள்ளன: மம்தா பிரசாரம்

கேரள தோ்தல்: வாக்குப் பதிவு விவரங்களை வெளியிடுவதில் தாமதம் ஏன்? மாா்க்சிஸ்ட், காங்கிரஸ் கேள்வி
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

