தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

ரஜினி - 173 படத்திலிருந்து விலகியது ஏன்? சுந்தர். சி விளக்கம்!

ரஜினி - 173 திரைப்படம் குறித்து...

News image

ரஜினிகாந்த், கமல் ஹாசன், சுந்தர். சி

Updated On :2 மே 2026, 8:06 pm IST

இயக்குநர் சுந்தர். சி நடிகர் ரஜினியின் 173-வது படத்திலிருந்து விலகியது குறித்து பேசியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்தின் 173-வது திரைப்படத்தை முதலில் இயக்குநர் சுந்தர். சி இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. இதனைத் தயாரிக்கும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் விடியோவை வெளியிட்டு அறிவித்ததும் எதிர்பார்ப்பு இயல்பாகவே அதிகரித்தது.

ஆனால், சில வாரங்களிலேயே அப்படத்திலிருந்து விலகுவதாக சுந்தர். சி அறிக்கை வெளியிட்டு அறிவித்தார். இது பலருக்கும் அதிர்ச்சியளித்தது.

ரஜினிக்கும் - சுந்தர். சிக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகளாலே இயக்குநர் விலகினார் என்று கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய சுந்தர். சியிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது. இதற்கு சுந்தர். சி, “எனக்கும் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தும் எந்த வருத்தங்களும் இல்லை. என்னால் என்னுடைய கதைக்களங்களில் மட்டுமே படம் உருவாக்க முடியும். கடந்த 16 ஆண்டுகளாக என் படங்களைப் பார்த்தால் தெரியும். என் படங்களின் கதை மிகச் சாதாரணமாக இருக்கும். அந்த இடத்தில் வேலை செய்யவே பிடித்திருக்கிறது.

ரஜினி சாருடன் இணைந்தால் இயல்பாகவே பெரிய எதிர்பார்ப்பு உருவாகிவிடும். அந்த எதிர்பார்ப்பை என்னால் பூர்த்தி செய்ய முடியுமா என்கிற தயக்கம் இருந்தது. நான் சுலபமாக சமரசம் செய்துவிடுவேன். அதனால், என்னுடைய படமாக அது இருக்குமா என்றும் குழப்பம் ஏற்பட்டது. அதனால், முறையாக நடிகர் ரஜினிகாந்திடமும் தயாரிப்பு நிறுவனத்திடமும் கூறி வெளியேறிவிட்டேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Director Sundar C has spoken about his exit from actor Rajinikanth's 173rd film.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.