சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த கோதுமலை அடிவாரக் கிராமங்களில் திங்கள்
கிழமை மாலை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. விவசாயி ஒருவரது வீட்டுக்கூரை காற்றில் பறந்தது. பாக்கு மரங்கள் வேரோடு சாய்ந்தன.
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் கடந்த நான்கு நாள்களாக மாலை நேரத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால், நிலத்தடி நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து வருவதால், பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், திங்கள்கிழமை மாலை கோதுமலை அடிவாரம் மாரியம்மன்புதுôர், மேலுôர், குமாரசாமியூர், சந்திரபிள்ளைவலசு, அரசன்குட்டை, பள்ளத்தாதனுôர், நடுப்பட்டி ஆகிய கிராமங்களில் சூறைக்காற்றுடன் ஒரு மணி நேரம் இடைவிடாது பலத்த மழை பெய்தது. சூறைக்காற்றில், மாரியம்மன்புதுôர் கிராமத்தை விவசாயி செல்லமுத்து (50) என்பவரது வீட்டுக்கூரை காற்றில் பறந்தது. அதே கிராமத்தை சேர்ந்த விவசாயி பாபு(35) என்பவரது தோப்பில் இருந்த பாக்கு மரங்கள் வேரோடு சாய்ந்தன.
அதுகுறித்து தகவலறிந்த துக்கியாம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் அண்ணாமலை, கிராம உதவியாளர் கணேசன், கிராம வனக்குழு தலைவர் ஆர். முருகன் ஆகியோர், பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நடிகர் அஜித் பிறந்த நாளில் ஓர் ஏமாற்றம்!

ரயில்வே துறையில் 30,000 பணியிடங்களை அழிக்கும் பாஜக! விழிப்புணர்வு பிரசாரத்தில் CPIM!

திமுக கொலை மிரட்டல்! ஆதவ் அர்ஜூனா வேண்டுகோள்! | VCK | Vijay

”முன்னேற்றத்திற்கான அரசு அமையும்!” பியூஷ் கோயல் பேட்டி NDA | ADMK
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

