கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

நட்டுவம்பாளையம் அரசுப் பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி தொடக்கம்

சங்ககிரி அருகே உள்ள நட்டுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடப்பு கல்வியாண்டில் 8-ஆம் வகுப்பு ஆங்கில வழிக் கல்விக்கான மாணவர்  சேர்க்கை தொடங்கியுள்ளது. 

Updated On :21 மே 2018, 1:04 am

சங்ககிரி அருகே உள்ள நட்டுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடப்பு கல்வியாண்டில் 8-ஆம் வகுப்பு ஆங்கில வழிக் கல்விக்கான மாணவர்  சேர்க்கை தொடங்கியுள்ளது. 
இதுகுறித்து அந்தப் பள்ளியின் பெற்றோர் -ஆசிரியர் கழகத் தலைவர் நீதிதேவன் கூறியது: 
நட்டுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 6-ஆம் வகுப்பு ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட்டு  நடைபெற்று வருகிறது. இதனையடுத்து 7-ஆம் வகுப்பும், நிகழாண்டு 8-ஆம் வகுப்பு தொடங்கப்பட்டு அதற்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. இப் பள்ளியில் யோகா, தியானம், கூட்டு உடற்பயிற்சி, சிலம்பம், விளையாட்டுப் பயிற்சி,  நடனப் பயிற்சி, சதுரங்க மன்றம், 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள்,  டிசிஎஸ் நிறுவனத்தால் கணினி பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. 
எனவே, ஏப்ரல் 25-ஆம் தேதி மாணவ, மாணவிகள் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான ஆங்கில வழிக் கல்வியில் சேர்க்கை நடைபெற்று வருகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.