சேலம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த சிறப்பு முகாமில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்ய 63,248 பேர் விண்ணப்பித்துள்ளனர் என மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தெரிவித்தார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் சிறப்பு முகாம் சேலம் மாவட்டத்தில் உள்ள 3,288 வாக்குச் சாவடிகளிலும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சேலம் தெற்குத் தொகுதிக்குள்பட்ட செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, ஜெயராணி மேல்நிலைப்பள்ளி, வீரபாண்டி ஊராட்சி ஒன்றியம் உத்தமசோழபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, நெய்க்காரப்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த சிறப்பு முகாமை மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ரோகிணி ராம்தாஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதுதொடர்பாக ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் கூறியது:
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 1.1.2019 ஐ தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்குமுறை திருத்தம் செய்யும் பணி கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
சேலம் மாவட்டத்தில் 3,288 வாக்கு சாவடிகளிலும் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாமில் சனிக்கிழமை வரை (அக்.6) வரை பெயர் சேர்த்தலுக்கான படிவம் 6 மொத்தம் 31,259, பெயர் நீக்கலுக்கான படிவம் -7 மொத்தம் 8,573, திருத்தம் செய்வதற்கான படிவம் 8 மொத்தம் 3,907, முகவரி மாற்றம் செய்ய படிவம் 8ஏ 3,007 என மொத்தம் 46,746 படிவங்கள் வரப்பெற்றுள்ளன. இதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் மொத்தம் 16,502 படிவங்களும், அக்.7 ஆம் தேதி வரை மொத்தம் 63,248 படிவங்களும் பெறப்பட்டுள்ளன.
மேலும், வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மூலமாக உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தகுதியான அனைத்து விண்ணப்பப் படிவங்களும் ஏற்கப்பட்டு வாக்காளர் பட்டியலில் உரிய பதிவுகள் மேற்கொள்ளப்படும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்டவைகளை மேற்கொள்வதற்கு வரும் அக்.31 ஆம் தேதி வரை பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வரும் 2019 ஜனவரி 4 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும் என்றார்.
இந்த ஆய்வின் போது சேலம் வருவாய் கோட்டாட்சியர் (பொ) ஜெகநாதன், சேலம் மாநகர கொண்டலாம்பட்டி மண்டல உதவி ஆணையர் எம்.சுந்தரராஜன், சேலம் தெற்கு வட்டாட்சியர் சு.சுந்தரராஜன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பணவீக்க நாயகனின் அதிரடி தொடருகிறது.. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

கார்த்தி - 30 பூஜை!

தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


