நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

ஆசிரியர் தின விழா: தலைமை ஆசிரியர் காலில் விழுந்து ஆசி பெற்ற ஆட்சியர்

சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ், பள்ளித் தலைமை ஆசிரியரின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.

Updated On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ், பள்ளித் தலைமை ஆசிரியரின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.
 ஆசிரியர் தினவிழாவையொட்டி சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினவிழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
 இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் பங்கேற்று கேக் வெட்டி பூங்கொத்து கொடுத்து ஆசிரியர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.
 கடந்த கல்வியாண்டில் அதிகம் தேர்ச்சி சதவிகிதம் அளித்த ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கிப் பாராட்டுத் தெரிவித்தார்.
 விழாவில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ், பள்ளி தலைமையாசிரியர் தமிழ்வாணிக்கு பொன்னாடை அணிவித்தார். பின்னர் திடீரென அவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று மாணவியரை நெகிழ வைத்தார். முதன்மைக் கல்வி அலுவலர் கணேசமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 அதேபோல மாவட்டம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அரசு, தனியார் கலைக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர் தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.