மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

பெரியார் பல்கலை.யில் ஆசிரியர் தின விழா

பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் தின விழா மாணவர்கள் சார்பில் புதன்கிழமை நடைபெற்றது.

Published On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் தின விழா மாணவர்கள் சார்பில் புதன்கிழமை நடைபெற்றது.
 பெரியார் பல்கலைக்கழகத்தில் 150 - க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர், ஆய்வியல் நிறைஞர் மற்றும் முதுகலை பாடங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் பயின்று வருகின்றனர். ஆசிரியர் தினத்தையொட்டி, பல்கலைக்கழகம் முன்பு ஒன்று கூடிய மாணவ, மாணவியர், துணைவேந்தர் பொ.குழந்தைவேல், பதிவாளர் (பொறுப்பு) கே.தங்கவேல், தேர்வாணையர் (பொறுப்பு) அ.முத்துசாமி ஆகியோருக்கு பூங்கொத்து, வாழ்த்து அட்டை மற்றும் பேனா பரிசளித்து வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து, துறை வாரியாக அனைத்து ஆசிரியர்களுக்கும் மாணவ, மாணவியர் பூங்கொத்து, வாழ்த்து அட்டை மற்றும் பேனா பரிசளித்து ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
 இதேபோன்று, பதிவாளர் (பொறுப்பு) கே.தங்கவேல் தலைமையில் அனைத்து ஆசிரியர்களும், துணைவேந்தர் பொ.குழந்தைவேலுவைச் சந்தித்து, ஆசிரியர் தினத்தையொட்டி புத்தகத்தை நினைவுப் பரிசாக வழங்கினர். பேராசிரியர்களுக்கு துணைவேந்தர் பொ.குழந்தைவேல் இனிப்பு வழங்கினார். இந்நிகழ்ச்சியில், அனைத்துத் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள்,இணைப் பேராசிரியர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.