தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!விஜய்க்கு ஆதரவு? சில மணி நேரத்தில் முடிவு எடுக்கப்படும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!பாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

ஏற்காடு மலையில் 2-வது நாளாக எரியும் காட்டுத் தீ: 100 ஹெக்டேரில் மரங்கள் எரிந்து சாம்பல்  

சேலம் ஏற்காடு மலைப் பகுதியில் இரண்டாவது நாளாகப் பற்றி எரியும் காட்டுத் தீயால் சுமார் 100 ஹெக்டேர் பரப்பளவில் மரங்கள் எரிந்து சாம்பலாயின. 

Updated On :25 பிப்ரவரி 2019, 8:30 am IST

சேலம் ஏற்காடு மலைப் பகுதியில் இரண்டாவது நாளாகப் பற்றி எரியும் காட்டுத் தீயால் சுமார் 100 ஹெக்டேர் பரப்பளவில் மரங்கள் எரிந்து சாம்பலாயின. 
மேலும், கோடை வெயில் தாக்கம் அதிகமாக உள்ளதாலும்,  காற்று வேகமாக வீசி வருவதாலும், காட்டுத் தீ தொடர்ந்து எரிந்து வருவதால்,  மலைப் பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.  தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது.  சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. சுற்றுலாத் தலமாக விளங்கும் ஏற்காடு மலைப் பகுதியில் உள்ள மரங்கள் காய்ந்து, பசுமை இழந்து காணப்படுகின்றன.
இந்த நிலையில்,  சேலம் ஏற்காடு மலை அடிவாரப் பகுதியில் உள்ள குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா பின்பகுதியில் சனிக்கிழமை மாலை திடீரென தீப்பிடித்தது.  காய்ந்து கிடந்த மூங்கில் மரங்களால் பிடித்த தீ மளமளவென வேகமாகப் பரவியது.  இதனால் கடும் புகை மூட்டம் ஏற்பட்டது.
ஒரு பக்கம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் அதேவேளையில், காற்றின் வேகமும் அதிகமாக இருந்ததால் தீ மலைப் பகுதி முழுவதும் பரவி வருகிறது.  மலை அடிவாரப் பகுதியில் பரவத் தொடங்கிய தீ,  ஏற்காடு மலையையொட்டிய பிரதான சாலை பகுதி வரை பற்றி எரிகிறது.
இதனிடையே, குரும்பப்பட்டி பூங்கா அருகே உள்ள கருங்காலி கிராமத்தில் சுமார் 26 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.  கடும் புகை மூட்டம் மற்றும் பாதுகாப்புக் கருதி பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டு, விநாயகம்பட்டி பகுதியில் உள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  வனத் துறையினர் மற்றும் கிராம மக்கள் உதவியுடன் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
     ஏற்காடு மலைப் பகுதியில் காட்டுத் தீ பரவிய சம்பவத்தைத் தொடர்ந்து, ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் அடங்கிய வருவாய்த் துறையினர்,  தீயணைப்புத் துறையினர், வனத் துறையினர் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியைப் பார்வையிட்டனர்.
மேலும்,  கருங்காலி கிராமத்தைச் சேர்ந்த மக்களையும் ஆட்சியர் நேரில் சந்தித்தார். இதனிடையே, சனிக்கிழமை இரவு சற்று குறைந்த தீயின் தாக்கம் ஞாயிற்றுக்கிழமை காலை அதிகமானது.  
இதனிடையே, பலமான காற்று வீசுவதால் எதிர் திசையில் தீ மூட்டி தீயை தணிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.  
தீயணைப்புத் துறையினர் சுமார் 5 வாகனங்களில் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். வனத் துறையினர்,  தீயணைப்புத் துறையினர், கிராம மக்கள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வாகனப் போக்குவரத்து நிறுத்தம்: இதனிடையே, மலைப் பகுதியில் தீ வேகமாகப் பரவி வருவதாலும்,  புகை மூட்டமாக இருப்பதாலும் ஏற்காடு மலைக்குச் செல்லும் வாகனப் போக்குவரத்து தற்காலிகமாக ஞாயிற்றுக்கிழமை காலை முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 
மேலும், ஏற்காடு செல்லும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.  இதனிடையே, காட்டுத் தீ குறைந்தவுடன் வாகனங்கள் அனுமதிக்கப்படும் என வனத் துறையினர் தெரிவித்தனர்.
சேலம் மாவட்ட வன அலுவலர் பெரியசாமி மேற்பார்வையில் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் வனத் துறையினர்,  தீயணைப்புத் துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
மேலும், பாதுகாப்புக் கருதி கருங்காலி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் விநாயகம்பட்டி பள்ளியிலேயே தொடர்ந்து தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  இதுதொடர்பாக, மாவட்ட வன அலுவலர் பெரியசாமி கூறியது:
சேலம் ஏற்காடு மலை அடிவாரத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ இயற்கையாக நடந்ததுபோல தெரியவில்லை.  மூங்கில் மரங்கள் கடந்த 4 ஆண்டுகளாக உள்ளன. ஆனால், இதுபோன் காட்டுத் தீ ஏற்படவில்லை.  மனிதர்கள் யாராவது தீ வைத்தார்களா என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது. காட்டுத் தீ வேகமாகப் பரவி வருவதால் சுமார் 100 ஹெக்டேர் பரப்பில் வேம்பு, புளியன், மூங்கில் மரம் உள்ளிட்ட அரிய வகை மரங்கள் எரிந்து சாம்பலாகிவிட்டன.
காற்று வேகமாக இருப்பதால் காட்டுத் தீயை அணைக்க முடியவில்லை.  வனத்துறையினர் உள்ளிட்ட அனைத்துத் துறைகளைச் சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வனப் பகுதியில் தீ வைப்போர் மீது வனப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படும்.  காட்டுத் தீ மேலும் மலைப் பகுதியில் பரவாமல் இருக்க தீயணைப்புத் துறையினர் மூலம்  கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.