கடந்த 2 வாரங்களில் பெட்ரோல், டீசல் விலை 4ஆவது முறையாக இன்றும் உயர்த்தப்பட்டுள்ளது.
மேற்காசிய போரின் எதிரொலியாக, ஹோா்முஸ் நீரிணை முடக்கத்தால் உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலியப் பொருள்களை சிக்கனமாகப் பயன்படுத்தும்படி, நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி வேண்டுகோள் விடுத்தாா்.
அதைத் தொடா்ந்து, பெட்ரோல்-டீசல் விலை அடுத்தடுத்து மூன்று முறை உயா்த்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2 வாரங்களில் 4ஆவது முறையாக பெட்ரோல், டீசல் விலை இன்றும்(திங்கள்கிழமை) உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு 2 ரூபாய் 46 காசு வீதமும் , டீசல் லிட்டருக்கு 2 ரூபாய் 57 காசு வீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன்படி, கடந்த 10 நாள்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 7.2, டீசல் விலை ரூ7.38 என்ற அளவு உயா்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயா்வு காரணமாக சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ. 107.77-ஆகவும், டீசல் ஒரு லிட்டா் ரூ. 99.55 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
Summary
Petrol and diesel prices were hiked for the fourth time within the last 11 days amid the ongoing Iran war. With the latest hike of over Rs 2, petrol prices have crossed Rs 100 per litre in Delhi.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெட்ரோல் - டீசல் விலை உயர்வு: இடதுசாரிக் கட்சிகள் சார்பில் மே 20இல் கண்டன ஆர்ப்பாட்டம்!
பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய அரசுக்கு உதயநிதி கண்டனம்

பெட்ரோல் ரூ. 10, டீசல் ரூ. 12.50 விலை உயர்வு உண்மையா? பொய்யா? அரசு விளக்கம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வா? அமைச்சகம் விளக்கம்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



