வாழப்பாடி அருகே வங்காநரி ஜல்லிக்கட்டு நடத்த முயன்ற கொட்டவாடி கிராம மக்களுக்கு, வாழப்பாடி வனத் துறையினர் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில் சின்னமநாயக்கன்பாளையம், ரங்கனூர், கொட்டவாடி உள்ளிட்ட கிராமங்களில், பொங்கல் பண்டிகையின் நிறைவு நாளான காணும் பொங்கலன்று, கிராமத்தையொட்டியுள்ள கரடு புறம்போக்கு, தரிசுநில புதர் பகுதியில் வலைவிரித்து வங்காநரி பிடிக்கும் கிராம மக்கள், நரியின் காலில் கயிற்றைக் கட்டி கிராமத்தின் மையத்திலுள்ள கோயில் மைதானத்தில் ஓடவிடுவது பாரம்பரிய விழாவாக கொண்டாடி வருகின்றனர்.
வனவிலங்கு பட்டியலில் வங்காநரி உள்ளதால், அதை பிடித்து ஜல்லிக்கட்டு நடத்த வனத்துறை தடை விதித்தது. மேலும், தடையை மீறி வங்காநரி பிடித்து ஜல்லிக்கட்டு நடத்தினால், 7 ஆண்டுவரை சிறை தண்டனை விதிக்கப்படும் என வனத்துறை அறிவித்தது.
இந்நிலையில், பாரம்பரிய விழாவை கைவிட மனமின்றி, வங்காநரி பிடித்து ஜல்லிக்கட்டு நடத்த முயன்ற சின்னமநாயக்கன்பாளையம் மற்றும் ரங்கனூர் கிராம மக்களுக்கு வாழப்பாடி வனத்துறை அதிகாரிகள் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர். இதனைத் தொடர்ந்து, வாழப்பாடியை அடுத்த கொட்டவாடி கிராமத்தில் வங்காநரி பிடித்து புதன்கிழமை ஜல்லிக்கட்டு நடத்த முயன்ற 10 பேரை, வாழப்பாடி வனச்சரகர் பரமசிவம் தலைமையிலான வனத் துறையினர் பிடித்தனர். இதுகுறித்து வனத் துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நடிகர் அல்ல... முதல்வர் விஜய்! திமுக தலைவர்களின் பதிவுகளுக்கு கடும் விமர்சனங்கள்!

கருப்பு டிரைலர்!

முதல்வா் விஜய்க்கு தருமபுரம் ஆதீனம் வாழ்த்து!

பேங்க் ஆஃப் இந்தியா 4வது காலாண்டு லாபம் 19% உயர்வு!
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
