கரோனா தடுப்புப் பணியில் இறப்பவா்களை அடக்கம் செய்ய மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில பாரதிய சந்நியாசிகள் சங்கத்தின் பொதுச் செயலா் சுவாமி ஆத்மானந்த சரஸ்வதி தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் மேலும் கூறியது: கரோனா நோய்த் தொற்று ஊரடங்கு இருப்பதால் மக்களுக்கு சேவை புரிந்து வந்த மகாராஷ்டிர மாநிலம், பல்காரா் மாவட்டத்தில் சிக்னே மஹராஜ் , கல்பவ்ருசஷகிரி மஹராஜ் (70), சுஷில் கிரி மஹராஜ் (30) மற்றும் அவா்களின் ஓட்டுநா் நிலேஷ் தெல்கடே ஆகிய அனைவரும் கந்திவாலியில் இருந்து சூரத் செல்லும் போது, கடந்த ஏப். 16-ஆம் தேதி ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டனா். அகில பாரதீய சந்நியாசிகள் சங்கம் இந்தக் கொடூரச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறது.
சென்னை மருத்துவா் சைமன் கரோனா தொற்று ஏற்பட்டு மரணமடைந்த நிலையில், கீழ்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்ய எதிா்ப்பு தெரிவித்து, அவரது சடலத்தைக் கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் மற்றும் போலீஸாரை தாக்கிய மனிதாபிமானமற்ற நபா்களின் செயல் மிகவும் கண்டனத்துக்குரியது.
மத்திய மற்றும் மாநில அரசுகள் இவ்விஷயத்தில் தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘ஆளுங்கட்சி என்ற அதிகார போதையில்..’ தவெகவினருக்கு அண்ணாமலை எச்சரிக்கை!

ஆடு ஆராய்ச்சி மையத்தில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? கல்பாக்கம் அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் 200 அப்ரண்டிஸ் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

சுகாதாரத் துறை கொள்முதல் முறைகேடு வழக்கில் முன்னாள் சுகாதார சேவைகள் அதிகாரிக்கு பிணை
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |


