சங்ககிரியில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச ஹோமியோபதி மாத்திரைகள் வழங்கல்
சங்ககிரியில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச ஹோமியோபதி மாத்திரைகள் வழங்கப்பட்டது.


சங்ககிரியில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச ஹோமியோபதி மாத்திரைகள் வழங்கப்பட்டது.
சேலம் மாவட்டம், சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட், சங்ககிரி இன்னர்வீல் சங்கத்தின் சார்பில் சங்ககிரியில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தன்மையுடைய ஹோமியோபதி மாத்திரைகள் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட், சங்ககிரி இன்னர்வீல் சங்கத்தின் சார்பில் நோய் எதிர்ப்பு சக்தி தன்மையுடையை மாத்திரைகளை டிரஸ்ட் தலைவர் ஏ.ஆனந்தகுமார், இன்னர்வீல் சங்கத்தலைவி இந்திராணி கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் சங்ககிரி பழைய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள பயணிகள் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வழங்கி மாத்திரைகளை எவ்வாறு உட்கொள்வது குறித்தும் விளக்கிப் பேசினர்.
டிரஸ்ட் செயலர் ஆர்.ராகவன், பொருளாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, நிர்வாகிகள் எஸ்.கணேஷ், ஆர்.கார்த்திகேயன், எம்.முரளி, சக்திவேல், முருகேசன், ராமநாதன், பொறியாளர் வேல்முருகன், கிஷோர் பாபு உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...