கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

சங்ககிரி அருகே தனியார் ஆம்னி பேருந்து மோதி இளைஞர் பலி 

சங்ககிரியை அடுத்த ஐவேலி மேம்பாலம் அருகே சாலையை கடக்க முயன்ற இரு சக்கர வாகனம் மீது செவ்வாய்க்கிழமை தனியார் ஆம்னி பேருந்து மோதியதில் இளைஞர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். 

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:03 pm

DIN

சங்ககிரியை அடுத்த ஐவேலி மேம்பாலம் அருகே சாலையை கடக்க முயன்ற இரு சக்கர வாகனம் மீது செவ்வாய்க்கிழமை தனியார் ஆம்னி பேருந்து மோதியதில் இளைஞர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். 

ஈரோடு, கருங்கல்பாளையம், கிருஷ்ணா வீதி பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சண்முகவேல் மகன் செந்தில்குமரன் (32). இவர் இரு சக்கரவாகனத்தில் ஈரோட்டிலிருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது சங்ககிரியிலிருந்து சேலம் செல்வதற்காக சாலையை கடக்க முயன்றுள்ளார். 

அப்போது கொச்சினிலிருந்து அசாம் நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்து எதிர்பாரதவிதமாக இரு சக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. அதில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற அவர் பலத்த காயமடைந்ததில் நிகழ்விடத்திலேயே இறந்துவிட்டார். ஆம்னி பேருந்து தேசிய நெடுஞ்சாலையையொட்டியுள்ள பாலத்தில் மோதியதில் பேருந்தில் பயணம் நான்கு பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் சிசிக்சைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து சங்ககிரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.