சங்ககிரியில் கட்டுரைப் போட்டியில் வென்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கல்
சங்ககிரி டிரஸ்ட் சார்பில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் வென்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.


சங்ககிரி டிரஸ்ட் சார்பில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் வென்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
சேலம் மாவட்டம், சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் சார்பில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பும், தண்ணீர் தண்ணீர், பசுமை சங்ககிரி ஆகிய அமைப்புகளின் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிகள் சங்ககிரியில் திங்கள்கிழமை நடைபெற்றன.
சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் சார்பில் சங்ககிரியின் இயற்கை ஆர்வலர் எஸ்டிஎஸ்.கனகராஜ் முதலாமாண்டு நினைவுதினத்தினையொட்டி 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு இயற்கை காட்சிகள் என்ற தலைப்பில் ஓவியப்போட்டியும், 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நான் விரும்பும் சங்ககிரி என்ற தலைப்பில் கட்டுரை போட்டியும் நடைபெற்றன. இதில் சங்ககிரி, குமாரபாளையம் வட்டத்திற்குள்பட்ட பள்ளிகளிலிருந்து 100க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இதில் ஓவியப்போட்டியில் உப்புப்பாளையம் வாணி இண்டர்நேஷனல் பள்ளியைச் சேர்ந்த 4-ஆம் வகுப்பு மாணவன் எஸ்.சபரிஷ் முதற்பரிசும், 2-ஆம் பரிசு கத்தேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 5-ஆம் வகுப்பு மாணவி எஸ்.கார்த்திகா, 3-ஆம் பரிசு நட்டுவம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 5-ஆம் வகுப்பு மாணவன் பி.சூரியபிரகாஷ், கட்டுரைபோட்டியில் முதற்பரிசு பல்லக்காபாளையம் ராயல் இண்டர்நேஷனல் பள்ளி 8ம் வகுப்பு மாணவன் த.விஸ்வக்கும், 2-ஆம் பரிசு அரசு மாதிரிப்பள்ளி வடுகப்பட்டி 7-ஆம் வகுப்பு மாணவி கே.பி.பிரியதர்சினியும், 3-ஆம் பரிசு சங்ககிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 9-ஆம் வகுப்பு மாணவி எஸ்.பிரியதர்சினியும் வெற்றி பெற்றனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு தண்ணீர் தண்ணீர் அமைப்பின் தலைமை நிர்வாகி கே.சண்முகம் சான்றிதழ்கள், கேடயங்களை வழங்கினார். இதனையடுத்து சங்ககிரி தண்ணீர் தண்ணீர் அமைப்பு, பசுமை சங்ககிரி, சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் அமைப்புகளின் சார்பில் சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அருள்மிகு செல்லியம்மன்கோயில் வளாகங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
இதில் சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் தலைவர் எ.ஆனந்தகுமார், துணைத்தலைவர் பாலகிருஷ்ணன், செயலர் ஆர்.ராகவன், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, இணைச் செயலர்கள் திவ்யா, அமுதா, நிர்வாகிகள் கணேஷ், கார்த்திகேயன், கிஷார்பாபு, முருகேசன், பொறியாளர் வேல்முருகன், தண்ணீர் தண்ணீர் அமைப்பு நிர்வாகிகள் பாலாஜி, சீனிவாசன், செந்தில், ராமு, திவாஹர், சந்தோஷ்குமார், பசுமை சங்ககிரி நிர்வாகிகள் மரம்பழனிசாமி, கோகுல்யாதவ், முருகானந்தம், பசுமை சீனிவாசன், அரசு பள்ளி ஆசிரியர்கள் சக்திவேல், ராமசாமி, செந்தில்குமார், ரோட்டரி சங்க மாவட்ட நிர்வாகி ஏ.வெங்கடேஸ்வரகுப்தா, இன்னர்வீல் சங்கத்தலைவி இந்திராணிகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...