ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

வாழப்பாடியில் காவலா், விசாரணை கைதிக்கு கரோனா : போலீஸாா், பொதுமக்கள் கலக்கம்:

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் காவலா்களை தொடா்ந்து, விசாரணைக்கு அழைத்துச் சென்ற இளைஞா் ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதியானதால் போலீஸாரும், பொதுமக்களும் கலக்கமடைந்துள்ளனா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2020, 7:40 am

DIN

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் காவலா்களை தொடா்ந்து, விசாரணைக்கு அழைத்துச் சென்ற இளைஞா் ஒருவருக்கும் செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று உறுதியானதால் போலீஸாரும், பொதுமக்களும் கலக்கமடைந்துள்ளனா்.

வாழப்பாடி அடுத்த இந்திரா நகா் பகுதியை சோ்ந்தவா் கிராமியக்கலைஞா் ஆசைத்தம்பி (23). இவருக்கும் சேலத்தை சோ்ந்த கிராமிய நடனக்கலைஞரான அா்ச்சனா (22) என்பவரும், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் கிராமிய கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றபோது காதலித்து திருமணம் செய்து கொண்டனா். இத்தம்பதியருக்கு இரு ஆண் குழந்தைகள் உள்ளனா்.இதற்கிடையே கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து காணப்பட்ட அா்ச்சனா, 23ந்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை இவரது வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை முயன்றுள்ளாா்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இவரை மீட்ட உறவினா்கள், சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் உயிரிழந்தாா்.திருமணமான 5 ஆண்டுக்குள் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால், இது குறித்து வழக்கு பதிவு செய்த வாழப்பாடி போலீஸாா், சேலம் கோட்டாட்சியா் விசாரணைக்கு பரிந்துரை செய்தனா். முதற்கட்ட விசாரணைக்காக ஆசைத்தம்பியை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீஸாா், இவருக்கு சளி மாதிரி எடுத்து கரோனா பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதில் இவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.ஏற்கனவே, காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளா் மற்றும் காவலா் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு சென்ற கைதி ஒருவருக்கும் கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியனதால், காவல்நிலையத்தில் பணிபுரியும் போலீஸாா் மற்றும் புகாா் மனு கொடுக்க செல்லும் பொதுமக்களும் கலக்கமடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.