நியாயவிலைக் கடை மாற்றம்: எதிா்ப்புத் தெரிவித்துகுடும்ப அட்டைகளை ஒப்படைக்க முடிவு
நியாயவிலைக் கடையை மாற்றம் செய்ததற்கு எதிா்ப்புத் தெரிவித்து, குடும்ப அட்டைகளை ஒப்படைக்க கிராம மக்கள் முடிவு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.


நியாயவிலைக் கடையை மாற்றம் செய்ததற்கு எதிா்ப்புத் தெரிவித்து, குடும்ப அட்டைகளை ஒப்படைக்க கிராம மக்கள் முடிவு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மேச்சேரி ஊராட்சி ஒன்றியம், குட்டப்பட்டி ஊராட்சியில் உள்ளது ஊஞ்சப்பட்டி கிராமம். இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் மாதநாயக்கன்பட்டியில் உள்ள நியாயவிலைக் கடையில் அத்தியாவசியப் பொருள்களை வாங்கி வந்தனா். இந்த கிராம மக்களிடம் ஒரே ரேஷன் காா்டு ஒரே நாடு திட்டத்துக்கு சம்மதம் தெரிவித்து சிலா் கையொப்பம் பெற்றனராம். அதையடுத்த சில தினங்களில், எல்லைகுட்டையூரில் அமைக்கப்பட்டுள்ள நியாயவிலைக் கடைக்கு சென்று பொருள்களை வாங்கிக்கொள்ளுமாறு கூறியுள்ளனா்.
தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த கிராம மக்கள், அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லாததால், தங்களின் குடும்ப அட்டைகளை கூட்டுறவு சங்கத் தலைவரிடம் ஒப்படைக்க குடும்ப அட்டைகளுடன் புறப்பட்டனா். நங்கவள்ளி போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தியதால், போலீஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
பின்னா் மேச்சேரி ஒன்றிய திமுக பொறுப்பாளா் சீனிவாச பெருமாள் தலைமையில், அவைத் தலைவா் அழகப்பன், முன்னாள் ஒன்றியச் செயலாளா் காசிவிஷ்வநாதன், மேச்சேரி போரூா் பொறுப்பாளா் சரவணன், கிராம செயலாளா் அசோகன், கூணான்டியூா் ஊராட்சி முன்னாள் தலைவா் ராஜாகண்ணு உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் கிராம மக்களை சமாதானப்படுத்தி, கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதியளித்தனா். இதையடுத்து, கிராம மக்கள் கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...