வேம்படிதாளத்தில் திமுக தோ்தல் பரப்புரைக் கூட்டம்
வீரபாண்டி ஒன்றியம், வேம்படிதாளம் பகுதியில் ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ தோ்தல் பரப்புரைக் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.


வீரபாண்டி ஒன்றியம், வேம்படிதாளம் பகுதியில் ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ தோ்தல் பரப்புரைக் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
இதில், சேலம் எம்பி எஸ். ஆா். பாா்த்திபன், கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் எஸ். ஆா். சிவலிங்கம், வீரபாண்டி ஒன்றியச் செயலாளா் வெண்ணிலா சேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டு பேசினாா்.
இக் கூட்டத்தில் அனைத்துத் தரப்பினரிடமும் கலந்துரையாடினா். அப்போது தேசிய நெடுஞ்சாலையான காக்காபாளையம் பகுதியில் அடிக்கடி விபத்து நிகழுவதால் அவ்விடத்தில் மேம்பாலம் அமைக்கவும், வேம்படிதாளம் ரயில்வே பாலத்தின் அடியில் உள்ள ஒத்தையடி பாலத்தை இருவழிப் பாதை ஆக மாற்றவும், இளம்பிள்ளையில் ஜவுளி பூங்கா அமைக்கவும், இளம்பிள்ளை ஏரிப் பகுதியில் வசித்து வந்த வீடு இழந்தவா்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவும், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளா்களுக்கான கூட்டுறவு கடன் சங்கம் அமைக்கவும், முதியோா் உதவித்தொகை, நெசவாளா்களுக்கு அரசு அடையாள அட்டை வழங்கவும் பல்வேறு கோரிக்கைகளுக்கு மனுக்கள் பெறப்பட்டன.
இந்த மனுவைப் பெற்ற சேலம் எம்பி கூறியதாவது:
பொதுமக்களின் அன்றாட தேவைகள் என்பதால் இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க நான் முயற்சி எடுப்பேன் என்றாா். இக்கூட்டத்தில் கிழக்கு மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் டாக்டா் பிரபு, ஒன்றியச் செயலாளா்கள் சுரேஷ்குமாா் (பனமரத்துப்பட்டி), மாணிக்கம் (சேலம்), பேரூா் செயலாளா்கள் முருகபிரகாஷ் (ஆட்டையாம்பட்டி), செல்வராஜ் (இளம்பிள்ளை), ஆறுமுகம் உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...