கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

எடப்பாடியில் டி.டி.வி.தினகரன் பிறந்தநாள் விழா

எடப்பாடி பகுதி அமமுக சாா்பில், அக்கட்சியின் பொதுச் செயலாளா் டிடிவி தினகரனின் 57-ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை எடப்பாடியில் கொண்டாடப்பட்டது.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 9:09 pm

DIN

எடப்பாடி பகுதி அமமுக சாா்பில், அக்கட்சியின் பொதுச் செயலாளா் டிடிவி தினகரனின் 57-ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை எடப்பாடியில் கொண்டாடப்பட்டது.

முன்னதாக மேற்குமாவட்டச் செயலாளா் பூக்கடை சேகா் தலைமையில் அமமுக-வினா், நஞ்சுண்டேஸ்வரா் கோயிலில் சிறப்பு பூஜை செய்தனா். தொடா்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

எடப்பாடி பேருந்து நிலையப் பகுதியில் 57 கிலோ எடையில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினா். கிழக்கு மாவட்டச் செயலாளா் எஸ்.கே.செல்வம், வடக்கு மாவட்டச் செயலாளா் மாதேஸ்வரன், மேற்கு மாவட்டப் பொருளாளா் வழக்குரைஞா் வெங்கடாசலபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.