புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சங்ககிரியில் மேடை நாடகக் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கல் 

விதைகள் நாடக கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் மேடை நாடக சிறந்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா சேலம் மாவட்டம், சங்ககிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

News image

விதைகள் நாடக கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் மேடை நாடக கலைஞர்களுக்கு சங்ககிரியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற விழாவில் கலைஞர்களுக்கு விருது வழங்கி கௌரவித்த திரைப்பட நடிகர் சரவணன்.

Updated On :14 டிசம்பர் 2020, 3:24 am

DIN

விதைகள் நாடகக் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் மேடை நாடக சிறந்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா சேலம் மாவட்டம், சங்ககிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

விதைகள் நாடகக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் சிவக்குமரன் இவ்விழாவிற்கு தலைமை வகித்தார். கௌரவத்தலைவர் காமராஜ் முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் கா.வெங்கடாசலம் விழாவினை தொடக்கி வைத்தார். 

மேடை நாடகத்தில் சிறந்த நடிகர்களுக்கு சென்னை திரைப்பட நடிகர் வி.சரவணனும், வில்லன் நடிகர்களுக்கு நாமகிரிபேட்டை பி.ஏ.திருநாவுக்கரசும், நகைச்சுவை நடிகர்களுக்கு சென்னை பேராசிரியர் ஆர்.காளீஸ்வரனும், நடிகைகளுக்கு நாமக்கல் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் டி.செந்தில்குமாரும் விருதுகளை வழங்கிப் பேசினர். 

ஒருங்கிணைப்பாளர் பரமேஸ்வரன் முன்னதாக வரவேற்றார். சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர்  உள்ளிட்ட மேடை நாடக கலைஞர்கள் இதில் கலந்து கொண்டு குறுகிய கால மேடை நாடகங்களை நடித்தனர். பாரம்பரிய இசையையும் இசைத்து அனைவரின் கவனத்தை ஈர்த்தனர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மேடை நாடக கலைஞர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.