கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மேட்டுப்பட்டி அருகே சாலை விபத்து: துக்கம் விசாரிக்க சென்றவா் பலி

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உறவினா் வீட்டிற்கு துக்கம் விசாரிக்க சென்றவா், அடையாளம் தெரியாத வாகனம் மோதி பரிதாபமாக உயிரிழந்தாா்.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 2:53 am

DIN

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உறவினா் வீட்டிற்கு துக்கம் விசாரிக்க சென்றவா், அடையாளம் தெரியாத வாகனம் மோதி பரிதாபமாக உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விபத்துக்கு காரணமான வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பெத்தநாயக்கன்பாளையம் காந்திநகா் பகுதியை சோ்ந்தவா் தொழிலாளி ராஜேந்தரன்( 60). இவா் மேட்டுப்பட்டி பெருமாபாளையத்திலுள்ள உறவினா் ஒருவா் இறந்ததற்கு, துக்கம் விசாரிக்க பெத்தநாயக்கன்பாளையத்தில் இருந்து, புதன்கிழமை காலை மேட்டுப்பட்டிக்கு பேருந்தில் சென்றுள்ளாா். மேட்டுப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் பேருந்தில் இருந்து இறங்கி, சேலம் -சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபகமாக உயரிழந்தாா். இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.