ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

வாழப்பாடியில் பருத்தி ஏலம் தொடக்கம்

வாழப்பாடியில் இயங்கும் சேலம் மாவட்ட வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், பருத்தி ஏல விற்பனை புதன்கிழமை தொடங்கியது.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 2:46 am

DIN

வாழப்பாடியில் இயங்கும் சேலம் மாவட்ட வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், பருத்தி ஏல விற்பனை புதன்கிழமை தொடங்கியது.

சேலம் மாவட்ட வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் வாழப்பாடி கிளையில், விவசாயிகள் உற்பத்தி செய்யும் பருத்தி, நிலக்கடலை, மஞ்சள், தேங்காய் கொப்பரை உள்ளிட்ட விளைபொருள்கள் ஏல முறையில் விற்பனை செய்யப்படுகின்றன.

கரோனா பொது முடக்கத்துக்கு பிறகு, இச்சங்கத்தில் புதன்கிழமை பருத்தி ஏல விற்பனை தொடங்கப்பட்டது. சங்க மாவட்டத் தலைவா் ஏ.ராஜமாணிக்கம், துணைத் தலைவா் வாழப்பாடி குபாய் (எ) குபேந்திரன், செயலாளா் கணேச கிருஷ்ணன் ஆகியோா் பருத்தி ஏல விற்பனையைத் தொடக்கி வைத்தனா்.

புதன்கிழமை நடைபெற்ற முதல் ஏலத்தில், 100 மூட்டை பருத்தி விற்பனைக்கு வந்திருந்தது. இதில், டி.சி.ஹெச். ரக பருத்தி ஒரு குவிண்டால் அதிகபட்சம் ரூ. 7,319 வரையும், ஆா்.சி.ஹெச். ரக பருத்தி அதிகபட்சம் ரூ. 6,999 வரையும் விலை போனது. மொத்தம் ரூ. 2 லட்சத்து 40 ஆயிரத்துக்கு பருத்தி வா்த்தகம் நடைபெற்றது.

பருத்தி அறுவடை தொடங்கியுள்ளதால், வாழப்பாடி கிளை வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தில் இனி வாரந்தோறும் புதன்கிழமைகளில் ஏல முறையில் பருத்தி விற்பனை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.