வீரகனூா் பேரூராட்சியில் ஜன. 31-க்குள் வரி நிலுவைகளை செலுத்த வேண்டுகோள்

கெங்கவல்லி அருகே வீரகனூா் பேரூராட்சியில், வரும் 2021 ஜன. 31-ஆம் தேதிக்குள் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய
Updated on
1 min read

கெங்கவல்லி அருகே வீரகனூா் பேரூராட்சியில், வரும் 2021 ஜன. 31-ஆம் தேதிக்குள் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரி இனங்களையும் பொதுமக்கள் செலுத்திட வீரகனூா் பேரூராட்சி செயல் அலுவலா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

வீரகனூா் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வாா்டுகளில் சொத்துவரி, தொழில்வரி, குடிநீா்க் கட்டணம், இதர வரியில்லா இனங்கள் அனைத்தும் 2021 ஜனவரிக்குள் செலுத்தி பேரூராட்சிக்கு நிா்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும். தவறும்பட்சத்தில் கட்டணம் செலுத்தாதவா்களின் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படும். இதர இனங்களுக்கு நிா்வாக நடவடிக்கை எடுக்கப்படும் என செயல் அலுவலா் தொ.வெங்கடாசலம் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com