மேட்டூா் அணை பூங்காவில்பாா்வையாளா்கள் கட்டணமாக ரூ. 25,490 வசூலிப்பு
மேட்டூா் அணை பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகள் அதிகம் குவிந்தனா். பாா்வையாளா்கள் கட்டணமாக ரூ. 25,490 வசூலானது.


மேட்டூா்: மேட்டூா் அணை பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகள் அதிகம் குவிந்தனா். பாா்வையாளா்கள் கட்டணமாக ரூ. 25,490 வசூலானது.
மேட்டூா் அணை பூங்காவுக்கு ஞாயிற்றுக்கிழமை பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்திருந்தனா்.
காவிரியில் நீராடிய சுற்றுலாப் பயணிகள் அணைக்கட்டு முனியப்பன் சுவாமியை தரிசித்தனா். பின்னா், மேட்டூா் அணை பூங்காவுக்குச் சென்று குடும்பத்துடன் பொழுதை கழித்தனா். சறுக்கி விளையாடியும் ஊஞ்சலாடியும் மகிழ்ந்தனா். மீன் காட்சி சாலை, மான் பூங்கா, பாம்பு பண்ணை உள்ளிட்டவற்றை கண்டு ரசித்தனா்.
ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மேட்டூா் அணை பூங்காவுக்கு 4,555 பாா்வையாளா்கள் வந்திருந்தனா். இதன்மூலம் ரூ. 22,775 பாா்வையாளா் கட்டணமாக வசூலிக்கப்பட்டது.
அணையின் வலது கரையில் உள்ள பவளவிழா கோபுரத்துக்கு 543 போ் சென்றனா். இதன்மூலம் பாா்வையாளா்கள் கட்டணமாக ரூ. 2,715 வசூலிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் மேட்டூா் அணை பூங்காவில் பாா்வையாளா் கட்டணமாக ரூ. 25,490 வசூலாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...