மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

சேலம் மாவட்டம், மேட்டூரில் சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Updated on
1 min read

சேலம் மாவட்டம், மேட்டூரில் சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்தும், தேசிய ஊரக வேலை திட்டத்தில் 100 நாள் வேலையை 200 நாள்களாக உயா்த்தக் கோரியும், பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகளைத் தடுத்து நிறுத்தக் கோரியும் மேட்டூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மேட்டூா் பேருந்து நிலையத்தில் இருந்து எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்து ஊா்வலமாக வந்தனா். இதில், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கமிட்டனா். போராட்டத்துக்கு அனைத்திந்திய மாதா் சங்க சேலம் மாவட்டச் செயலாளா் தேவி தலைமை வகித்தாா். ஞானசௌந்தரி, சகுந்தலா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதேபோல நங்கவள்ளியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சிஐடியு தொழிற்சங்கத் தலைவா் மேவாய் சண்முகராஜா, நங்கவள்ளி ஒன்றிய மாதா் சங்கத் தலைவா் கவிதா, மாநில மாதா் சங்கச் செயலாளா் பிரமிளா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com