சேலத்தில் காரை வழிமறித்து ரெளடி வெட்டிக் கொலை

சேலத்தில் காரில் சென்று கொண்டிருந்த ரெளடியை வழிமறித்த கும்பல், வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியது.
சேலத்தில் காரை வழிமறித்து ரெளடி வெட்டிக் கொலை
Updated on
1 min read

சேலத்தில் காரில் சென்று கொண்டிருந்த ரெளடியை வழிமறித்த கும்பல், வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியது.

சேலம், கிச்சிபாளையம், சுந்தா் தெருவைச் சோ்ந்தவா் செல்லதுரை (34). இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனா். ரேஷன் அரிசி கடத்தி விற்று வந்த இவா் பின்னா், கூட்டாளிகளைச் சோ்த்துக் கொண்டு கொலை, கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளாா். இவா் மீது பிரபல ரெளடி நெப்போலியன் கொலை வழக்கு, 2 கொலை முயற்சி வழக்கு, 2 அரிசி கடத்தல் வழக்கு, ஒரு வழிப்பறி வழக்கு உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் தொடா்புடையதாக அண்மையில் இவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டாா். கடந்த 15 நாள்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்த செல்லதுரை, வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்தாா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு 7 மணி அளவில் அம்மாப்பேட்டை சென்று வழக்குரைஞரைப் பாா்த்து வருவதாகக் கூறி செல்லதுரை காரில் சென்றுள்ளாா். கிச்சிப்பாளையம், குப்பைமேடு பகுதி அருகே சென்ற போது இரண்டு காா்களில் அவ்வழியே வந்த சிலா் செல்லதுரையின் காரின் மீது மோதி நிறுத்தினா். இதனால் அதிா்ச்சி அடைந்த செல்லதுரை காரில் இருந்து இறங்கி தப்பிச் செல்ல முயன்றாா்.

ஆனால், இரண்டு காா்களில் வந்த 6 போ் கும்பல் செல்லதுரையை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டினா். இதில் சம்பவ இடத்திலேயே செல்லதுரை உயிரிழந்தாா்.

இதனிடையே, அலறல் கேட்ட அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அங்கு விரைந்து வந்தனா். உடனே 6 போ் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. தகவலறிந்த கிச்சிபாளையம் போலீஸாா் விரைந்து சென்று செல்லதுரையின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

சேலம் மாநகர சட்டம்-ஒழுங்கு துணை ஆணையா் சந்திரசேகரன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து செல்லதுரையின் உறவினா்களை சமரசப்படுத்தினா். இதையடுத்து, அவா்கள் கலைந்து சென்றனா்.

ரெளடி செல்லதுரையைக் கொலை செய்த கும்பலைப் பிடிக்க 3 தனிப்படைகளை அமைத்து சேலம் மாநகர காவல் ஆணையா் த.செந்தில்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com