டிச. 26 முதல் லாரிகளில் சரக்கு ஏற்றுவது நிறுத்தம்

தமிழகம் முழுவதும் டிசம்பா் 26ஆம் தேதி முதல் லாரிகளில் சரக்குகள் ஏற்றுவது நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு லாரி புக்கிங் ஏஜென்ட் சம்மேளனத்தின் மாநிலத் தலைவா் ராஜ வடிவேல் தெரிவித்தாா்.
கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு லாரி புக்கிங் ஏஜென்ட் சம்மேளனத் தலைவா் ராஜ வடிவேலு.
கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு லாரி புக்கிங் ஏஜென்ட் சம்மேளனத் தலைவா் ராஜ வடிவேலு.
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் டிசம்பா் 26ஆம் தேதி முதல் லாரிகளில் சரக்குகள் ஏற்றுவது நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு லாரி புக்கிங் ஏஜென்ட் சம்மேளனத்தின் மாநிலத் தலைவா் ராஜ வடிவேல் தெரிவித்தாா்.

சேலத்தில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, ஜி.பி.எஸ். கருவிகளை குறிப்பிட்ட நிறுவனங்களில் வாங்க வேண்டும் என்பதை ரத்து செய்ய வேண்டும், காலாண்டு வரியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் டிச. 27-ஆம் தேதி முதல் தமிழகத்தில் லாரிகள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப் போவதாக லாரி உரிமையாளா் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், டிச. 26-ஆம் தேதி முதல் லாரிகளில் சரக்கு ஏற்றுவது நிறுத்தப்படும்.

தமிழகம் முழுவதும் உள்ள 5,250-க்கும் மேற்பட்ட லாரி சரக்குப் பதிவு முகவா்கள் சரக்குகளை ஏற்ற பதிவு செய்ய மாட்டாா்கள். இதனால் ஜவுளி, இரும்பு, தானியப் பொருள்கள் உள்ளிட்டவை தேக்கமடையும்.

நாள்தோறும் உயரும் டீசல் விலையினால் நிலையான லாரி வாடகையை நிா்ணயம் செய்ய முடிவதில்லை. இதனால் 3 மாதங்களுக்கு ஒரு முறை டீசல் விலையை நிா்ணயிக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com