நாடாளுமன்றத்தில் பாதிக்கும் மேலான வாழ்க்கையை கழித்த முன்னாள் பிரதமர் தேவெ கெளடா, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சரத் பவாரிடம் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தெரிவித்தார்.
நாட்டில் 10 மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 37 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. காலியாகவுள்ள இடங்களுக்கான தேர்தலும் நடத்தப்பட்டு, புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், மாநிலங்களவையில் பதவிக் காலம் நிறைவடைந்த உறுப்பினர்களுக்கு பிரியாவிடை அளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்று வருகின்றது.
இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாநிலங்களவை உறுப்பினர்களை பாராட்டி உரையாற்றினர்.
மோடி பேசியதாவது:
”அவையில் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதங்கள் நடைபெறுகின்றன. அவற்றில் ஒவ்வொரு உறுப்பினரு தனித்துவமாக பங்காற்றியுள்ளனர். இதுபோன்ற தருணங்களில் கட்சி எல்லைகளைக் கடந்து பொதுவான மரியாதை உருவாகிறது. பதவிக் காலம் நிறைவடைந்து அவையைவிட்டு செல்லும் உறுப்பினர்களிடம் அரசியலில் முடிவே இல்லை என்பதை சொல்ல விரும்புகிறேன்.
எச்.டி. தேவெ கெளடா, மல்லிகார்ஜுன கார்கே, சரத் பவார் ஆகியோர் தங்கள் வாழ்நாளின் பாதிக்கும் மேலான காலத்தை நாடாளுமன்ற பணிகளுக்காக செலவிட்ட மூத்த தலைவர்கள். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.” எனத் தெரிவித்தார்.
Summary
Deve Gowda, Kharge, and Sharad Pawar must learn from him! — Prime Minister Modi
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

51,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கினார் பிரதமர் மோடி!

இத்தாலியில் பிரதமர் ஜார்ஜியா உடன் மோடி சந்திப்பு - புகைப்படங்கள்
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!

பிரதமர் மோடி தீவிரவாதியா? கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும்!
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy




